எகிப்தில் விமானம் கடத்தல்!

5 வெளிநாட்டவர். 7 சிப்பந்திகள் தவிர்த்து

 76 பேரும் விடுவிப்பு

எகிப்தில் இருந்து சைப்ரஸுக்கு கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள். 7 சிப்பந்திகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள். 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை ஆயுதம் ஏந்திய ஒருவர் தான் கடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த நபர் தனது உடலில் கட்டியுள்ள குண்டுகளை வெடிக்கச் செய்துவிடுவதாகக் கூறி மிரட்டி வருகிறாராம். இந்நிலையில் எகிப்து அதிகாரிகள் தீவிரவாதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள். 7 சிப்பந்திகள் தவிர்த்து பிற பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 22ம் திகதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் இன்று எகிப்து பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விபத்துகளால் விமானத்தில் செல்ல மக்கள் அஞ்சும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top