எத்தனை பெண்கள்?
இணையத்தில் வைரலாக பரவி
வரும் ஒரு புகைப்படம்
அண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டு புகைப்படக்காரரான டிஸியானா வெர்கரி என்பவர் இன்ஸ்டாகிராமில், ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில் பெண்களின் உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அது தற்போது எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பெண்கள் மீதான குழப்பம் அல்ல அது; எத்தனை பெண்கள் என்பது தான் குழப்பம். இணையத்தில், இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. ஒரு சிலர் 2 பெண்கள் என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலர் 3 என்றும், 4 என்றும் குழப்பமான பதில்களை பதிவிட்டு வருகின்றனர். கண்ணாடி பிம்பங்களால் தொடர்ச்சியாக தெரியும் அந்த பெண்களின் தோற்றம், பார்வையாளர்களை சற்று குழப்பத்தையே ஏற்படுத்தி விடுகின்றன.
அதில் இருப்பது எத்தனை உருவம் உண்மை; எத்தனை உருவம் பிம்பம் என்று புகைப்படக்காரர் தான் வெளியிட வேண்டும்.
0 comments:
Post a Comment