மயில் வேட்டைக்காரன்
சிக்கினார்
தங்கொட்டுவை பிரதேசத்தின்
பிரபல வர்த்தகர் ஒருவரின் மருமகனாம்!
மயிலை
வேட்டையாடிய நபர் தங்கொட்டுவை பிரதேசத்தின் பிரபல
வர்த்தகர் ஒருவரின்
மருமகன் என்ற
விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நேற்று இணைய
செய்திகளில் பரவலாக பேசப்பட்டது. இதேவேளை, சந்தேகநபர் தொடர்பில்
தகவல்களை வன
ஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியிருந்தது.
இதன்பிரகாரம்,
குறித்த நபர்
தங்கொட்டுவை பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின்
மருமகன் என்ற
விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த
சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
ஆனமடுவ பிரதேசத்தில்
சட்டவிரோத துப்பாக்கியை
பயன்படுத்தி மயிலை வேட்டையாடியுள்ளதுடன்,
அதை புகைப்படம்
எடுத்து தனது
பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளதாக ஆரம்பக்கட்ட
விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்,
இந்த நபர்
இத்தாலியிருந்து வந்தவர் என்பதுடன் குறித்த நபர்
தொடர்பான மேலதிக
தகவல்களை வன
ஜீவராசிகள் திணைக்களம் திரட்டியுள்ளதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.