அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ் மொழி பேசும் ஒருவர்
அரச அதிபராக நியமிக்கப்பட மாட்டாரா?
தமிழ் மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில்
வாழ்ந்து கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத்திற்கு
இந்த நல்லாட்சியிலாவது தமிழ் மொழி பேசும் ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்பட
மாட்டாரா என இம்மாவட்டத்தில் வாழும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ் சகோதரர்கள் சார்பில் அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறாமலேயே எதுவித ஆர்ப்பாட்டமுமின்றி நிர்வாக ரீதியாக சரியாகவும் கச்சிதமாகவும் தமது தேவைகளை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
மாகாண ஆளுநர் ஒருவர் தமிழ் சகோதரர் நியமனமாகியிருக்கின்றார். வட மாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றிய ஒருவரை நீக்குமாறு கடந்த அரசாங்க காலத்தில் கோரிய போதும் அது நிறைவேறாத நிலையில் இன்று அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது (மூப்புரிமை இலக்கம் 270 ஆ.பதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மொனராகலை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர்)
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் கூட தமிழ் சகோதரர்கள் விரும்பியது போன்று படைத் தரப்பினர் அல்லாமல் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுமாத்திரமல்லாமல் 4 மாவட்டங்களில் 4 தமிழ் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மூப்புரிமை இலக்கம்
பெயர் ( மாவட்டம் )
178 என் வேதநாயகன் (யாழ்ப்பாணம்)
224 பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் (மட்டக்களப்பு)
240 எஸ்.அருமைநாயகம் (கிளிநொச்சி)
244 ஆர்.கீதீஸ்வரன் (முல்லைத்தீவு)
இப்படியான நிலையில் அம்பாறை மாவட்டத்தில்
சாரதியும் நாங்களே நடதுனரும் நாங்களே என மார்பு தட்டும் முஸ்லிம் காங்கிரஸ்
ஜனாதிபதியும் பிரதமரும் கலந்து கொண்ட கட்சியின் பாலமுனை மாநாட்டில் இப்படியான
மக்களுக்கு உதவக் கூடிய நல்ல பல விடயங்களைக் கோரிக்கையாக வைத்து ஆட்சியாளர்களிடம் இருந்து ஆதரவான சமிக்சைகளை மாநாட்டில்
கூடியிருந்த மக்கள் முன் பெற்றிருக்க முடியும். ஆணால் மக்கள் நலன் கருதி அப்படியான கோரிக்கைகள் எதுவும் முன் வைக்கப்படவில்லை.
இம்மாவட்டத்திற்கு முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக (இந்த நல்லாட்சியில்) நியமிக்க முடியாவிட்டாலும் தமிழ் அரசியல்வாதிகளுடன் இணைந்து
நடவடிக்கை எடுத்தாவது தமிழ் மொழி பேசும் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமருடன் பேசி முடிவெடுக்க வேண்டியது இம்மாவட்டத்தின்
சாரதியினதும் நடத்துனரினதும் கடமையாகும்.
2016.02.15 திகதி அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்
அமைச்சு வெளியிட்டுள்ள இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தில் மூப்புரிமைப் பட்டியல்
அடிப்படையில் பின்வரும் முஸ்லிம்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இது போன்று தமிழர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மூப்புரிமை இலக்கம் பெயர்
9 எம்.ஐ.எம் றபீக்
29 எஸ்.எம்.முஹம்மத்
73 ஏ.அப்துல் மஜீத்
98 எம்.எச்.முயுனுதீன்
127 எம் ஐ.அமீர்
155 யூ.எல்.ஏ.அஸீஸ்
180 எம்.ஏ.தாஜுதீன்
183 ஏ.மன்சூர்
186 ஏ.எச்.எம்.அன்ஸார்
203
ஆர்.யூ.அப்துல் ஜலீல்
204 ஐ.எம்.ஹனிபா
222 ஏ.சி.எம்.நபீல்
274 எம்.அப்துல் அல்லம்
279 எம்.எம்.முஹம்மத்
311 ஏ.எல்.முஹம்மது சலீம்
349 வை.எல்.முஹம்மது நபவி
356 எம்.எம்.நயிமுதீன்
360 எம்.முஹம்மது நவ்பல்
0 comments:
Post a Comment