கல்முனை ஸாஹிரா கல்லூரியில் ஆங்கில மொழி மூலத்தில்
பரீட்சை எழுதிய மாணவர்களும்
சாதனை
கல்முனை
ஸாஹிரா கல்லூரியின்
இருமொழி கற்கைப்
பிரிவில் கல்விபயின்று
ஆங்கில மொழிமூலத்தில்
2015 O/L பரீட்சை எழுதிய 5 மாணவர்களும் இம்முறை மிகச்சிறந்த
பெறுபேறுகளை பெற்று புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளனர்.
அனைவரும்
அனைத்துப்பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதோடு பின்வரும் பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர்.
அஹ்மத் சிபி 9A
அக்தர்
பர்வீஸ் 8A
அஹ்ஸன்
அக்தர்
7A
முஹம்மத்
றஸாத்
3A
றோஸன்
றிகாஸ்
2A
இம்மாணவர்களின்
சாதனைகளுக்கு துணைநின்ற வகுப்பாசிரியரும்
கணித பாட
ஆசிரியரும் பிரதிப் பகுதித்தலைவருமாகிய
ஜனாப் I.M. உவைஸ் அவர்களின் அக்கறையும் வழிகாட்டலும்
இவர்களின் வெற்றிப்படிகளாக
அமைந்தன...
அத்துடன்
விஞ்ஞான பாட
ஆசிரியையும் உதவிப்பகுதித் தலைவருமாகிய. ஜனாபா M.A.F. மிஸ்னா அவர்களின் அதீத
அக்கறையும் இம்மாணவர்களின் சாதனைகளுக்கு
அத்திவாரமாக அமைந்தன...
மேலும்
ஜனாப்.. ஹாதிம் (ஆங்கிலம், இலக்கியம்)
ஜனாப்...
அன்ஸார் மௌலவி
(இஸ்லாம்)
ஜனாபா. ஐனூன் (தமிழ், இலக்கியம்)
ஜனாபா
பஸீல் (வரலாறு)
ஜனாப்
இஸ்மத் (உடற்கல்வி)
ஜனாபா.
அனூஷா பேகம்
(I.C.T.)
ஜனாப்
சமீம் (குடியுரிமைக்கல்வி)
ஆகிய
ஆசிரியர்களின் சிறப்பான உயிரோட்மிக்க கற்பித்தல் மற்றும்
வழிகாட்டல்களுமே இம்மாணவர்களின் வெற்றியின் தூண்களாகும்...
மேலதிக
வகுப்புக்கள் மூலம் இம்மாணவர்களை மேலும் மேம்படுத்திய
ஆசிரியர்களான. ஜனாப் நிசார் (வரலாறு, குடியுரிமைக்கல்வி), ஜனாப். இஸ்மாலெப்பை
(கணிதம்),
.ஜனாபா
மிஸ்னா (விஞ்ஞானம்)
மற்றும்.
ஜனாப் முஜாஹிர் (விஞ்ஞானம்) ஆகியோரின்
பங்களிப்பும் முக்கியமானதாகும்...
இவையனைத்திற்கும்
மேலாக எமது
கல்லூரி அதிபர்
ஜனாப் P.M.M. பதுறுதீன் அவர்கள்
எம்மீது வைத்திருந்த
நம்பிக்கை, அவர் வழங்கிய பரிபூரண ஒத்துழைப்பு,
எங்களுக்காக முகம்கொண்ட சவால்கள், எமக்கு அளித்த
ஊக்கம் போன்றவை
சரித்திரத்தில் எழுதப்பட வேண்டியவையாகும்...
இவ்விடத்தில்
இம்மாணவர்களிலொருவரின் பெற்றாராகிய வைத்தியர்
ஜனாப் பாறூக்
அவர்களின் அக்கறையும்
கண்காணிப்பும் உதவிகளும் மற்றும் கல்லூரியின் சிரேஷ்ட
ஆசிரியர்களில் ஒருவரான. ஜனாப் அமீர் அவர்களின்
ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் நன்றியுடன்
நினைவுகூரவேண்டிய விடயங்களாகும்...
மேலும்
எமது வளர்ச்சிக்கும்
சாதனைகளுக்கும் உறுதுணையாய் நின்ற இங்கு பெயர்
குறிப்பிட்ட மற்றும் குறிப்பிடப்படாத அனைவருக்கும் 2015 இருமொழி கற்கைப் பிரிவின் பகுதித்
தலைவர் என்றவகையில்
நன்றிகளை தெரிவிக்கின்றேன்...
நன்றி
A. B.
Sheron Dilras
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.