லாகூரில் தற்கொலைப் படை தாக்குதல்
பெண்கள், குழந்தைகள் உட்பட70 பேர் பலி
பாகிஸ்தானின்
லாகூர் நகரில்
தற்கொலைப் படை
பயங்கரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள்,
குழந்தைகள் உட்பட 70 பேர் பலியாயினர்.
ஈஸ்டர்
பண்டிகையை முன்னிட்டு
நகரில் உள்ள
பிரபலமான பூங்கா
ஒன்றில் குவிந்திருந்த
மக்களைக் குறிவைத்து
இந்தத் தாக்குதல்
நிகழ்த்தப்பட்டுள்ளது.
இயேசு
கிறிஸ்து உயிர்த்தெழுந்த
தினமாக கிறிஸ்தவர்களால்
கருதப்படும் ஈஸ்டர் தினம், உலகம் முழுவதும்
ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு லாகூர்
நகரில் உள்ள
குல்ஷா-ஏ-இக்பால் பூங்காவில்
மாலை நேரத்தில்
பெண்கள், குழந்தைகள்
உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள்
குடும்பத்துடன் கூடியிருந்தனர்.
அப்போது,
சக்தி வாய்ந்த
வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்த தற்கொலைப்படை
பயங்கரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில்,
70 பேர்
உடல் சிதறி
உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அருகில்
உள்ள மருத்துமனைகளில்
சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது
நிலைமை கவலைக்கிடமாக
உள்ளதால், உயிரிழப்பு
மேலும் அதிகரிக்கக்கூடும்
என்று அச்சப்படுகிறது.
குண்டு
வெடித்த இடத்தில்
உடல் பாகங்கள்
சிதறிக் கிடந்ததாகவும்,
அந்த இடமே
ரத்தமயமாக மாறிவிட்டதாகவும்
சம்பவத்தை நேரில்
பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த
குண்டு வெடிப்பு
சம்பவத்தை அடுத்து
அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று
வருகிறது. பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ்
ஷெரீஃபின் சொந்த
ஊரான லாகூர்,
நாட்டின் பிற
பகுதிகளை விட
வன்முறைச் சம்பவங்கள்
குறைவாக நடக்கும்
இடமாகும். இப்போது,
அங்கு பயங்கரவாதிகள்
மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருப்பது பாகிஸ்தானில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.