கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில்
மொத்தமாக 6012 மாணவர்கள் 9ஏ சித்தி


அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மொத்தமாக 6012 மாணவர்கள் 9 சித்தி பெற்றுள்ளனர்.
ஒன்பது பாடங்களிலும் சித்தி பெற்றுக்கொண்ட 6012 மாணவ மாணவியர் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 274,324 பாடசாலை பரீட்சார்த்திகளில் 189,428 பரீட்சார்த்திகள் உயர்தரம் கற்க தகுதிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 69.33 வீதமான மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன், 83,796 மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடையவில்லை எனவும் அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top