பிரஸ்சல்ஸ் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய நபர் கைது?
பொலிஸார் வெளியிட்ட தகவல்!
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் வெடிகுண்டு நிபுணராக செயல்பட்டு வந்த Najim Laachraoui என்பவரை
Anderlecht நகரில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று நிகழந்த வெடுகுண்டு தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் இவர் மட்டுமே விசாரணை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தார்.
மேலும் இவருடன் இணைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவர் வெடிகுண்டு தாக்குதலின்போதே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
25 வயதான இந்த நபர் பாரிஸ் தாக்குதல் சம்பவத்திலும் தொடர்புடைவர் என கருதப்படுகிறது. இவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் டி.என்.ஏ. மாதிரியை ஆய்வு செய்த அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய Salah Abdeslam என்பவரால் Laachraoui புடபெஸ்ட் பகுதியில் வைத்து சந்தித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி சிரியாவுக்கு தப்பிச் செல்லும் வழியில் வனப்பகுதியில் வைத்து Mohamed Belkaid என்ற அல்ஜீரிய நாட்டு தீவிரவாதி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.