டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின்
வைத்திய சேவையில் ஐம்பது ஆண்டுகள்
நிறைவைப் பாராட்டிக் கௌரவிப்பு - 2016.04.02
அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் சாய்ந்தமருது கிளையின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களைப் பாராட்டும் நிகழ்வும் எதிர்வரும் 2016.04.02
சனிக்கிழமை காலை 8.45
மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
அல்-ஹாஜ் எம்.ஐ. அப்துல் ஜப்பார் (தலைவர்)
அல்-ஹாஜ் ஏ.எல். மீராலெவ்வை (செயலாளர்)
FELICITATION
டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல் அவர்களின்
வைத்திய சேவையில் ஐம்பது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு
பாராட்டு
காலம் :
2016.04.02
சனிக்கிழமை காலை 8.45 மணி
இடம் :
சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடம்
அரச சேவை ஓய்வூதியர்; நம்பிக்கை நிதியம் - சாய்ந்தமருது
டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல்
வாழ்க்கைக் குறிப்புகள்
பிறந்த திகதி : 1943.11.27
பிறந்த இடம் : 516, அல்-ஹிலால் தெற்கு வீதி, சாய்ந்தமருது-14
தந்தை :
அல்-ஹாஜ் முஹல்லம் ஆதம் லெவ்வை முகம்மது இப்றாலெவ்வை (1910-2002)
தாய்; :
முகம்மது முஸ்தபா லெவ்வை கதீஜா உம்மா (1920-1997)
மனைவி :
யூசுப் இஸ்ஸதீன் பரீதா
பாடசாலைகள்:
1. அல்ஹிலால் வித்தியலயம் சாய்ந்தமருது (1949
-1954) (LKG
தொடக்கம் 5ம் வகுப்பு வரை)
2. அரசினர் சிரேஷ;ட பாடசாலை, சா.ம.(கல்முனை ஸாஹிறாக் கல்லூரி) (1955-1958) GCE O/L வரை)
3. கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி (1959-1963 GCE O/L-Sc./English medium, GCE A/L
தொழில் கல்வி:
கொழும்பு வைத்தியக் கல்லூரி (1964-1965)
தொழில் தகமை:
Certificate
of Efficiency as Apothecary/Registered Medical Practitioner (Regd.No: 1136) இலங்கை வைத்திய சபையில் வைத்தியராக பதிவு செய்யப்பட்ட இலக்கம்: 1136
அரச வைத்திய சேவை
முதலாவது நியமனம்: பதுளை பொது வைத்திய சாலை (1966.02.01)
சாய்ந்தமருதில் வைத்திய சேவை:
1973.05.01-
1975.12.31
1978.11.23- 1986.12.31
• இக்காலப்பகுதியில் மத்திய மருந்தகத்தின் உட்கட்டமைப்பினதும் சுற்றாடலினதும் அபிவிருத்தி மேற்கொண்டது
• வைத்தியசாலைக்கான அபிவிருத்தி சபையும் தொண்டர் குழுவும் இலங்கையில் முன்னோடியாக நிறுவப்பட்டு வெற்றிகரமாக இயங்கியது. இவற்றின் சேவை கலவரச் சூழலில் மிகப் பிரயோசனமாக விளங்கியது.
• 1979
ஜூன் மாதம் பிரசவ விடுதி திறந்து வைக்கப்பட்டது. இது அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் அதிக பிரசவம் நடக்கும் மகப்பேற்று மனையாக விழங்கியது.
• 1985
இல் நோயாளர் விடுதி திறந்து வைக்கப்பட்டதைத் தொடாந்து சாய்ந்தமருது வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாகத் தரமுயர்;ந்தது;
• வெளிநோயாளர் சிகிச்சை, விடுதிச்சேவைகள், கிளினிக்குகள் மற்றும் பொதுச் சுகாதார சேவைகள், போசாக்:குச் சேவைகள் என்பன இங்கு திறம்பட இயங்கியது..
கல்முனைக்குடியில் வைத்திய சேவை
1987;.01.01 – 1989.09.18 வரை
• கல்முனை அஷ;ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் முன்னோடியான பிரசவ விடுதியினைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு 1988.11.05ம் திகதி திறக்கப்பட்டபோது இதன் முதல் வைத்தியப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார்.
பிரத்தியேக வைத்திய சேவை
1980 தொடக்கம் இன்று வரை (2016) 06 பரம்பரையைச்
சேர்ந்த மக்களுக்கு வைத்திய சேவையளித்துள்ளார்.
வைத்தியம் தொடர்பான ஏனைய சேவைகள்
• கல்முனை வைத்திய சங்கம் ஸ்தாபித்தமை
• கல்முனை சுகாதார அபிவிருத்தி சங்கம் உருவாக்கியமை
• மேற்படி அமைப்புகள் ஊடாக கல்முனையில் 1990களில் விசேட வைத்திய முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றில் கொழும்பில் இருந்து புகழ்பெற்ற விசேட வைத்தியர்கள கலந்த கொண்டதுடன் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் கலந்து சேவையாற்றினர்;
• வைத்தியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல வைத்தியக் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்தமை.
உள்ளுராட்சி சேவை
1982இல் சாய்ந்தமருதுவில் இயங்கிய கல்முனை பிரதேச சபையின் உப அலுவலகத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தராகக் கடமை புரிந்து சாய்ந்தமருதுவின் பல்வேறு அபிவிருத்தியில் முன்னின்று உழைத்தார்.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தில் இணைவு
1994.08.01
இல் மரைக்கார் சபை உறுப்பினராக இணைந்து 1996.06.02 தொடக்கம் நம்பிக்கையாளர் சபை உறுப்பனராகவும் உப தலைவராகவும் நியமனம் பெற்று 2005இல் தலைவராகவும் கடமையாற்றினார்;. 1994 தொடக்கம் 2010ம் ஆண்டுவரை பின்வரும் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றினார்;.
• பைத்துஸ் ஸகாத் நிதியத்தை ஆரம்பித்து 1997 முதல் 2007 வரை தலைமை தாங்கி நடாத்தினார்.
• மரைக்கார் சபைக்கான முதலாவது யாப்பு இவரால் தயாரிக்கப் பட்டது;.
• 2003இல் புதிய பள்ளிவாசல் கட்டட திறப்பு விழா நிகழ்விலும் மலர் வெளியீட்டிலும் முக்கிய பங்களிப்புச் செய்தார்;.
• பள்ளிவாசல் செயலகம் கட்டுவதற்கு முன்னின்று செயற்பட்டார்;.
• அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தை புனர்நிர்மாணம் செய்து அதன் உப தலைவராகச் செயற்பட்டார்
• சுனாமிப் பேரலையின் போது நிவாரண வேலைகளில் ஈடுபட்டதோடு சுனாமியின் பின்னரான பல அனர்த்த முகாமை செயற்பாடுகளிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளிலும் முக்கிய பங்காற்றினார்;.
• அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியுடன் இணைந்து நடாத்திய பல்வேறு சமாதான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியதுடன் மலேசியா,இந்தோநிசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற தென் கிழக்காசிய முஸ்லிம் தலைவர்களுக்கான மகாநாட்டில் கலந்து கொண்டார்;.
• தேசிய மற்றும் மாவட்ட அனர்த்தமுகாமை மற்றும் மீள்நிர்மாணக் குழுக்களில் அங்கத்தவராகச் செயற்பட்டார்.
• சமூக நலன்புரி மற்றும் ஜனாசா நலன்புரி நடவடிக்கைகளில் அக்கறை காட்டியதுடன் சுனாமியின் போது இடிந்து விழுந்த மையவாடிகளின் சுற்றுமதில்களை மீளக் கட்டுவதற்கான நிதி உதவியை கோல் நிறுவனத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தார்.
• 2009ம் ஆண்டு 'சாய்ந்தமருது வரலாறு' எனும் நூலை ஜனாப் ஏ.எச்.எம். முஸ்தபாவுடன் இணைந்து பள்ளிவாசல் அனர்த்தமுகாமை சபை சார்பாக தொகுத்து வெளியிட்டார்;.
சமாதானச் செயற்பாடுகள்
• 2008
இல் அம்பாரை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்தை ஸ்தாபித்து அதன் தலைவராக தொடர்ந்தும் செயற்படுகின்றார்;.
• 2010
இல் மேற்படி சம்மேளனம் 'சமாதனத்திற்கான சமயங்கள்' (RfP) எனும் சர்வதேச அமைப்பின் இலங்கைக் கிளையின்;
(SLCRP அம்பாரை மாவட்டக் கிளையாக பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது SLCRP இன் மத்திய குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்;.
• தேசிய சூரா சபையின் பொதுச் சபை உறுப்பினராகப் பல பங்களிப்புகளைச் செய்து வருகின்றார்.
சிரேஷ;ட பிரஜைகளுக்கான செயற்பாடுகள்
• சாய்ந்தமருது சிரேஷ;ட பிரஜைகள் ஒன்றியத்தை ஆரம்பித்து தற்போது அதன் தலைவராகச் செயற்படுகின்றார்;. இதன் மூலம் பல ஆணைக்குழுக்களுக்கும் திணைக்களங்களுக்கும் மகஜர்களும் வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டுள்ளதுடன் நேரடியாக சாட்சியங்களும் அளிக்கப்பட்டன.
• சிரேஷ;ட பிரஜைகளுக்கான பல நிகழ்ச்சிகளும் கருத்தரங்குகளும் நடாத்துவதற்கு முன்நின்று உழைத்துவருகினறார்.
• சாய்ந்தமருது பிரதேச அரச ஓய்வூதியர்களின் சங்கத்தின் உப தலைவராகவும் பங்களிப்புச் செய்துவருகின்றார்.
தொகுப்பு: அல்-ஹாஜ் எம்.ஐ.அப்துல் ஜப்பார்
(தலைவர், அரச சேவை ஓய்வூதியர்; நம்பிக்கை நிதியம் - சாய்ந்தமருது)
0 comments:
Post a Comment