பல்கலைக்கழக கல்வியை அபிவிருத்தி செய்வதற்கான

புதிய செயற்திட்டங்கள் அவசியம்!

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி

நாட்டில் பல்கலைக்கழக கல்வியின் தரத்தை அபிவிருத்தி செய்வதற்கான புதிய செயற்திட்டங்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைகழகத்தின் 2016ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.
பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் ஆகியமறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறந்த ஒரு நாளையை எமது நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு வழங்கி சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டிகளுக்கு சிறப்பாக முகம்கொடுக்கும் வகையில், பல்கலைக்கழகக் கல்வி மற்றும் பாடசாலைக் கல்வித் துறைக்குத் தேவையான சகல வசதிகளையும் குறைவின்றி பெற்றுக்கொடுத்து, கல்வித் துறையை பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை நம்பிக்கை  வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில் பல்கலைக்கழக கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top