அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்காக
1.1 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு
கூட்டு எதிர்க்கட்சி கண்டனம்


அரசாங்கத்தின் 30 அமைச்சர்களுக்காக வாகனங்களை கொள்வனவு செய்ய 1.1 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுவதை கூட்டு எதிர்க்கட்சி கண்டித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள்அமைச்சர் ஜி எல் பீரிஸ், அரசாங்கம் பொதுமகன் ஒருவரை கவனிப்பதற்கு பதிலாகஅமைச்சர்களின் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை பொறுத்தவரை தற்போது அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்மற்றும் கொஸ்கம இராணுவ முகாம் தீப்பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலன்களைகவனிக்கவேண்டும்.
இதனைவிடுத்து ஏற்கனவே வாகனங்களை கொண்டுள்ள அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவுசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது தமது அமைச்சர்களின் நலனுக்காக பொதுமகனை நசுக்கும் செயற்பாடு என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
1.1 பில்லியன் ரூபா வாகனக்கொள்வனவுக்கான அமைச்சர்களின் விபரங்கள்
அமைச்சர்களின் வாகன கொள்வனவு அனுமதிக்காக நேற்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில்குறைநிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தது.1,180 மில்லியன் ரூபாய்களுக்கான குறைநிரப்பு பிரேரணையே சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி அமைச்சர்கள் சந்திம வீரக்கொடி, அனோமா கமகே, வஜிர அபேவர்த்தனஆகியோருக்கு 70 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
நிமல் லன்ஸாவுக்கு 99 மில்லியன் ரூபாய்களும் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, சுமேதா ஜிஜெயசேன, விஜயதாஸ ராஜபக்ச, துஸ்மந்த மித்ரபால, சுவாமிநாதன், ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு 70 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளன.
ஹரின் பெர்ணான்டோ மற்றும் தாராநாத் பஸ்நாயக்க ஆகியோருக்கு 91 மில்லியன்ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளன.
இதேவேளை ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, விஜித் விஜயமுனி சொய்ஸா, ரஞ்சித்சியம்பலாபிட்டிய, பி.திகாம்பரம் ஆகியோருக்கு 35 மில்லியன் ரூபாய்களும், சுஜீவசேனசிங்க, 20 மில்லியன்களும் சந்திம பிரேமதாஸவுக்கு 35 மில்லியன்களும்,

துனேஸ்கன்கந்த 63 மில்லியன்களும், டி பி ஏக்கநாயக்க 35 மில்லியன்களும் வசந்த சேனாநாயக்க35 மில்லியன்களும், லசந்த அழகியவன்சவுக்கு 56 மில்லியன்களும், அருந்திக்கபெர்ணான்டோவுக்கு 56 மில்லியன்களும் மனஸ நாணயக்காரவுக்கு 28 மில்லியன்களும், இந்திகபண்டாரநாயக்கவுக்கு 28 மில்லியன்களும் சுசந்த புஞ்சிநிலமேக்கு 27.5 மில்லியன்ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top