இலங்கை பணிப்பெண்ணுக்கு
26 இலட்சம் ரூபா நட்டஈடு
கடந்த
13 வருடங்களாக ஊதியமின்றி பணியாற்றிய இலங்கை பணிப்பெண்ணுக்கு
26 இலட்சம் ரூபா (66,800 சவூதி ரியால்) நட்டஈடு வழங்குமாறு அந்நாட்டு நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
தனது
மூன்று பிள்ளைகளின்
கல்வித் தேவைக்காக
400 சவூதி ரியால் சம்பளத்திற்கு
13 வருடத்திற்கு முன்னர் வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு
சென்ற சேதா
காதர் இஸ்மயில்
ஆயிசா உம்மா
(Seda Cader Ismail Asiya Umma) என்ற பெண்ணுக்கே இவ்வாறு நட்டஈடு
வழங்குமாறு சவூதி நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
கடந்த
13 வருடங்களாக அடிமையாக பணியாற்றிய அப்பெண்ணுடைய கடவுச்சீட்டை
புதுப்பிப்பதற்காக கடந்த 2014ஆம்
ஆண்டு அப்பெண்ணின்
எஜமான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு
சென்றபோதே இது
குறித்து தெரியவந்துள்ளது.
இதனைத்
தொடர்ந்து உயர்ஸ்தானிகராலயத்தினூடாக
பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டு எஜமானான முபாறக் என்பவர் கைது
செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகளையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான
பிரயாணச்சீட்டு பெற்றுக்கொடுப்பதுடன் இதுவரை
செய்த சேவைக்கான
நட்டஈட்டையும் வழங்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் எஜமானாருக்கு
சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த
13 வருடங்களாக சவூதியில் அடிமையாக
பணியாற்றிய இப்பெண்ணுக்கு தனது தாய் மொழியான
தமிழ் மொழி
பேச முடியாது
மறந்து போயுள்ளமை
கவலைக்குரிய விடயமாகும். எது எவ்வாறிருப்பினும் மீண்டும் தாய் நாட்டுக்கு செல்வதற்கான
வாய்ப்பை இப்பெண்
பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இவர் கொழும்பிலிருந்து 50 km தூரத்திலுள்ள
பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அரப்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
An errant sponsor has paid out SR66,800 to his maid
for failing to pay her for 13 years.
An appeals court had upheld the judgment in favor
of Sri Lankan maid Seda Cader Ismail Asiya Umma, for her sponsor to pay the
dues, which include an air ticket home.
The high court in Hail has handed the amount to the
Sri Lankan Embassy.
An embassy official said the payment has been
released while the sponsor Mubarak Al-Qahtani is still in jail.
Asiya Umma, from Beruwela in Sri Lanka, had come to
the Kingdom for an agreed wage of SR400 a month. “She had sought work in the
Kingdom to help her three school-going daughters,” the embassy official said.
The mission, he said, became aware of her plight
when the sponsor came to the embassy to renew her passport in 2014. Following
formal inquiries, the mission’s officials found that the maid had been kept as
a slave and not paid her salary from the time she arrived.
The embassy registered a complaint with the police.
The official said the maid had been in the Saudi
household for such a long time that she has forgotten Tamil, her mother tongue.
Now she only speaks Arabic. She has thanked the embassy officials for helping
free her, he said.
The Sri Lankan mission would send the payment to
its Foreign Ministry in Colombo, which in turn will hand over the money to the
maid who is already in Sri Lanka with her family in Beruwela, some 50 km from
the capital Colombo.
0 comments:
Post a Comment