3 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
பாலஸ்தீனத்தில் சர்ச்சை



ஹமாஸ் இயக்கத்தினரின் சுயாட்சிக்குட்பட்ட பாலஸ்தீன பகுதியான காசா முனையில் கடும் எதிர்ப்பையும் மீறி 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அப்பகுதியில், வெவ்வேறு கொலை வழக்குகளில் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தண்டிக்கப்பட்டவர்களின் மேல்-முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும் அவர்கள் 3 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் அங்குள்ள மத்திய சிறையில் 3 பேரில் 2 பேரை சுட்டுக்கொன்றும், ஒருவரை தூக்கில் போட்டும் நேற்று மரண தண்டனையை நிறைவேற்றினர்.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு பாலஸ்தீன ஜனாதிபதி  மகமது அப்பாஸ் ஒப்புதலை பெறாமலேயே காசாமுனை ஆட்சியாளர்கள், இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

3 பேருக்குமரண தண்டனையை நிறைவேற்றி இருப்பது சட்டவிரோதம். பாலஸ்தீன அடிப்படை சட்டத்துக்கு முரணானது என பாலஸ்தீன அட்டார்னி ஜெனரல் அகமது பிரேக் கருத்து தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top