பிறந்து 8
நாட்களே ஆன குழந்தைக்கு
14 இடங்களில் சூடு வைத்த கொடூர பாட்டி
ஒடிசாவில்
பிறந்து 8 நாட்களே
ஆன ஆண்
குழந்தை வயிற்றை
சுற்றி 14 இடங்களில்
தீ காய
தழும்புகளுடன் bagarh மாவட்ட மருத்துவமனையில்
உயிருக்கு போராடி
வரும் சம்பவம்
ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Badipali கிராமத்தை சேர்ந்த sutanu- ஆர்த்தி
தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தை, வயிறு
வீங்கிய நிலையில்
மஞ்சள் காமாலை
அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு
உயிருக்கு போராடி
வருகின்றது.
முன்னதாகவே,
குழந்தைக்கு மஞ்சள் காமாலை அறிகுறி இருந்ததால்,
பெற்றோர் மருத்துவமனையில்
அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
மருத்துவ
சிகிச்சையில் திருப்தி இல்லாத குழந்தையின் பாட்டி
குமுதினி, மஞ்சள்
காமாலை குணமடைய,
8 நாட்களே ஆன
குழந்தைக்கு வயிற்று பகுதியை சுற்றி 14 இடங்களில்
இரும்பு கம்பியை
சூடாக்கி சூடு
வைத்துள்ளார்.
இதனையடுத்து
குழந்தையின் உடல்நிலை மிக மோசமாகியுள்ளது, உடனே
பெற்றோர் குழந்தையை
மீண்டும் மருத்துவமனைக்கே
கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து
மருத்துவர் கூறுகையில், சூடு வைத்ததால் குழந்தையின்
நிலை மிக
மோசமாக உள்ளதாக
தெரிவித்துள்ளார், மேலும் பழங்குடி
மக்கள் வாழும்
மாவட்டத்தில் இதுபோன்று குழந்தைகளுக்கு தழும்பு இடுவது
வழக்கம், இந்த
ஆண்டு இதுவரை
குறைந்தபட்சம் 8 குழந்தைகள் இதுபோன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment