அதிகமாக
குறும்பு செய்யும் குழந்தையை
அடக்குவது
எப்படி?
உங்கள்
குழந்தை அளவுக்கு
அதிகமாக சேட்டை
பண்ணுகிறதா? சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறதா?
சரியாக படிக்கவில்லையா?
அடித்து வழிக்கு
கொண்டுவர வேண்டும்
என்று நினைக்காமல்
ஆற அமர
உட்கார வைத்து
புரிய வைத்தால்
உங்கள் சொல் கேட்கும் குழந்தையாக மாறிவிடுவார்கள்.
* அக்கம்
பக்கத்தில் உள்ள அமைதியான குழந்தைகளோடு உங்கள்
குழந்தைகளையும் விளையாடவிடுங்கள்.
* மூளைக்கு
வேலை தரும்
விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொடுத்து விளையாடக் கற்றுக்கொடுங்கள்.
* வெண்டைக்காய்,
வெங்காயம், கரட் ஆகியவற்றை அவ்வப்போது
பச்சையாக உண்ணக்
கொடுங்கள்.
* தினசரி
கைகளை நீட்டுவது,
கால்களை விரிப்பது
போன்ற உடற்பயிற்சிகளை
உடன் இருந்து
சொல்லிக்கொடுங்கள்.
* இறை வசனங்களை ஓதும்போதும் தொழுகையில் நாம் ஈடுபடும்போதும் குழந்தைகளையும் அமைதியாக... அந்த இடத்தில் அமரச் செய்து...அதனை அவதானிக்கச் செய்யுங்கள். குழந்தைகளையும் அவ்வாறு
செய்யும்படி தூண்டுங்கள்.
* ஒவ்வொரு
நல்ல பழக்கமாக
நிதானமாக கற்றுக்கொடுங்கள்.
அவசரப்படவேண்டாம்.
* உறவினர்கள்,
நண்பர்கள் மூலம்
உங்கள் குழந்தைகளை
கண்டிக்க சொல்லுங்கள்,
கட்டுப்படுவான்.
- மொத்தத்தில்
மனரீதியாக கொஞ்சம்
கொஞ்சமாக குழந்தையைத் திருத்தப்பாருங்கள்!
அதுவே குழந்தைகள் திருந்துவதற்குரிய சரியான வழியாகும்.
0 comments:
Post a Comment