எதிர்வரும் 8 ஆம் திகதி அனைத்து உறுப்பினர்களும்
நாடாளுமன்றம்
வரவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!
எதிர்வரும்
8 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில்
அனைத்து உறுப்பினர்களும்
பங்குகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த
விடயம் ஆளும்
தரப்பு பாராளுமன்ற
உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும்
8 ஆம்
திகதி நிதி
அமைச்சர் ரவி
கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு
வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
எனவே,
இதில் கலந்து
கொள்ள வேண்டியது
அனைத்து ஆளும்
தரப்பு நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு
கடிதம் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
தற்போது வெளிநாட்டு
பயணங்களை மேற்கொண்டுள்ள
அரசாங்கத் தரப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்ப வேண்டிய
கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை,
ஆளும் கட்சியின்
நாடாளுமன்ற குழு கூட்டமும் எதிர்வரும் 8 ஆம்
திகதி ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில்
ஐக்கிய தேசிய
கட்சி மற்றும்
ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்படி,
ஐக்கிய தேசிய
கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர்களின் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தலைமையில் இடம்பெறுவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment