இலங்கைக்கு
150 கோடி டாலர் கடன்:
ஐ.எம்.எப்.
ஒப்புதல்
இலங்கைக்கு 150
கோடி டாலர்
கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது..இதுகுறித்து ஐ.எம்.எப்.
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
:இலங்கையில்
பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தலைமையிலான
அரசு பல்வேறு
பொருளாதார சீர்திருத்த
நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில்,
சர்வதேச சூழ்நிலைகளால்
அந்நாட்டின் பொருளாதாரம் தற்போது நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.இலங்கையின் பொருளாதாரம்
நெருக்கடி நிலையிலிருந்து
மீண்டு வர
உதவிடும் வகையில்
150 கோடி டாலர்
கடனுதவி வழங்க
முடிவு செய்துள்ளது.
முதல்
கட்டமாக 16.8 கோடி டாலர் மதிப்பிலான கடனுதவி
உடனடியாக வழங்க
முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை
காலாண்டு மதிப்பீடுகளின்
அடிப்படையில் ஆறு கட்டங்களாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
0 comments:
Post a Comment