8 வருட போராட்டத்திற்கு பின் ஜனாதிபதி போட்டிக்குள்
நுழைந்தார்  ஹிலாரி கிளிண்டன்


சுமார் 8 வருட போராட்டத்திற்கு பின் அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக இருந்த ஹிலாரி கிளிண்டன், தற்போது முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் நுழைந்துள்ளார்.
 1788 ம் ஆண்டிற்கு பிறகு முக்கிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனில் மனைவியான ஹிலாரி கிளிண்டன், 2008 ம் ஆண்டு ஒபாமாவை எதிர்த்து அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஜனநாயக கட்சிக்கு மக்களிடம் இருந்த எதிர்ப்பு அலைகள் காரணமாக ஹிலாரி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.
தற்போது நியூஜெர்சி மாகாணத்தில் வெற்றி பெற்று, 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலை பொறுத்தவரை டொனால்ட் டிரம்ப் கடுமையான போட்டியாளராக இருந்தாலும், அது ஹிலாரியின் இந்த சாதனையை பாதிக்கவில்லை.
அமெரிக்க அரசை பொறுத்தவரை அதிக அளவில் பெண்கள் இல்லாததால் ஹிலாரியின் தேர்வு அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 80 சதவீதத்திற்கு மேலும், மாகாண உறுப்பினர்களில் 75 சதவீதத்திற்கு மேலும், கவர்னர்களில் 88 சதவீதம் பேரும் ஆண்களாக உள்ளனர்.

குழந்தைகள் நலன், பெண்கள் நலன் உள்ளிட்ட சமூக பிரச்னைகளை பெண்களாலேயே உணர்வுப்பூர்வமாக அணுக முடியும் என பலரும் கருதுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆதரவு ஹிலாரிக்கே அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top