வாகன கொள்வனவுக்கு அரசினால் சலுகைகள்

ஊடகவியலாளர்களின் கேள்விகளால்
தடுமாற்றமடைந்த  அமைச்சர்கள்


கொழும்பில் அமைச்சரவை முடிவினை அறிவிக்கும் மாநாட்டின் போது, அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கு அரசினால் சலுகைகள் வழங்கப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்டபோது தடுமாற்றமான பதில்களை அமைச்சர்கள் வழங்கியதை காணமுடிந்தது.
மக்கள் மீது வரிச்சுமையினை அதிகரிக்கின்றது அரசு,ஆனால் அமைச்சர்களின் வாகன கொள்வனவிற்கு சலுகைகளை வழங்குவது முறையா? என ஊடகவியலாளர்கள் கேள்விகளை அமைச்சர்களிடம் தொடுத்தனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர்கள் 20 வருடங்களிற்கு ஒருமுறை அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே வாகன கொள்வனவிற்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரிவத்தார்கள்.
இதன் போது சரத்பொன்சேகாவினால் 7 கோடி ரூபாவிற்கு மேற்கொள்ளப்பட்ட வாகன கொள்வனவு பற்றியும் கேள்வி கேட்கப்பட்ட போது  அமைச்சர்கள் உரிய பதிலினை வழங்கவில்லை.
ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்களின் பதிலாக 20 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் வாகன கொள்வனவு சந்தர்ப்பமே வழங்கப்பட்டது என்ற பதிலினையே தொடர்ந்தும் வழங்கினர்.

மக்களுக்கு வரிச்சுமை தொடர்ந்தும் அதிகரிக்கப்படும் சூழ்நிலையின்போது அமைச்சர்களின் வாகனக் கொள்வனவிற்கான சலுகை தேவையா? குறைந்த செலவில் வாகனங்களை கொள்வனவு செய்ய அனுமதிக்குமாறும் ஊடகவியலாளர்களினால் இங்கு கேட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top