கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி
மர்ஹூம் பறக்கத் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் நடாத்திவந்த மர்ஹூம் பறக்கத் ஞாபகார்த்த கிண்ணம்-2016 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் பலத்த போட்டிக்கு மத்தியில் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி மர்ஹூம் பறக்கத் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
றினோன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் றிஷாட் சரீப் தலைமையில் நடைபெற்ற இவ் றுதிப் போட்டியில் கல்முனையின் முன்னணி கழகங்களான றினோன் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் மோதியது.
கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் நடாத்திவந்த மர்ஹூம் பறக்கத் ஞாபகார்த்த கிண்ணம்-2016 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை (2016.06.05) வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.
138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் முடிவில் 123 ஓட்டங்களை பெற்று தோல்வி கண்டது. இதன் அடிப்படையில் 15 மேலதிக ஓட்டங்களால் வெற்றிபெற்று கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவானது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக எம். நிஸாம் தெரிவானார். சுற்றுப்போட்டியின் தொடர் நாயகன் விருது அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய .ஜே.எம். றிம்சாத்துக்கு வழங்கிவைக்கப்பட்டது.
வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நடுவர்கள் ஏற்பாட்டுக்குழு மற்றும் சிறப்பாக செயற்பட்ட கழகத்துக்கும் பாராட்டி கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ.எம்.பைஸால் காசீம், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரீ.சரவாநன்தன், விசேட அதிதிகளாக பொறியியலாளர் ஹலீம் எஸ். முஹம்மட், ஓய்வுபெற்ற விரிவுரையாளர் எம்..எம். முஸ்தபா, கல்முனை லெஜன்ட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.எம். ஜமால்டீன், றினோன் விளையாட்டுக்கழக தவிசாளர் .எம். பைரூஸ், சனிமௌண்ட் விளையாட்டுக்கழக செயலாளர் எம்..எம்.அப்துல் மனாப், ஆகியோர் உட்பட விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள் மற்றும் வர்த்தகர்களும் கலந்து சிறப்பித்தனர்









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top