பாகிஸ்தான் பிரதமருக்கு நடந்த
இதய அறுவை சிகிச்சை வெற்றி

குர்ஆன் ஓதுதலுடன் பிராத்தனைகளும் நடத்தப்பட்டுள்ளன

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு, லண்டன் மருத்துவமனையில் நான்கு மணிநேர இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஷெரீப் நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் கூறுகையில், மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட அறுவை சிகிச்சை மிகவெற்றிகரமாக நடந்ததாகவும், இதனால் மருத்துவர்கள் திருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தந்தையின் அறுவை சிகிச்சை வெற்றி அடைந்ததினால் தான் மிகவும் சந்தோஷத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், நான்கு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைபிறகு தற்போது ஷெரீப் ICU ஐசியூ பிரிவில் ஒய்வு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஷெரீப்பின் அறுவை சிகிச்சை வெற்றிபெற வேண்டி பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சர்பில்  குர்ஆன் ஓதுதலுடன் பிராத்தனைகளும் நடத்தப்பட்டுள்ளது.
ஷெரீப் லண்டனில் உள்ள மருத்துவமனையில் இருந்த படி வீடியோ மூலம் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, 2016-17 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top