கொஸ்கமவிலுள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் தீ
කොස්ගම කඳවුරේ මහා පිපිරීමක්
கொஸ்கமவிலுள்ள
சலாவ இராணுவ
முகாமில் உள்ள
ஆயுதக் களஞ்சியசாலையில்
சற்று நேரத்துக்கு
முன்னர் தீ
பற்றியுள்ளதாக இராணுவ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்..
அப்பிரதேசம் பொது மக்களுக்கு தடை
செய்யப்பட்டிருபதாகவும் அறிவிக்கப்படுகின்றது..
இதேவேளை தீயுடன் பாரிய வெடிப்பு சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் தீ சம்பவத்தை பார்வையிட குறித்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தீயினைத் தொடர்ந்து குறித்த இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள கொழும்பு - அவிசாவளை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கு முப்படைகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment