கண்டி, லைன் பள்ளிவாசலின் மேல் உயர்
கோபுரமான
"மினரா" கட்டுவதற்கு இனவாத குழு ஆர்ப்பாட்டம்!
ஆணையாளரின் கடிதத்தை காண்பித்ததையடுத்து போராட்டம் முடிவு
கண்டி,நகரில் சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள லைன் பள்ளிவாசலின் மேல்
உயர்
கோபுரமான "மினரா" அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
கடும்போக்கு இனவாத குழு ஒன்று இன்று5 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டிருந்தது.
குறித்த
பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகள் எதுவும் இடம்பெறாத
நிலையில் பள்ளிவாசலின் “மினரா”
கட்டுமானப் பணிகள் நடைபெற்றால், கண்டி நகரில்
அமைந்துள்ள பௌத்தர்களின் புனித தளமான தலதா
மாளிகையை விட
அது உயரமாக
அமையும் எனத்
தெரிவித்து கடும்போக்கு பெளத்த அமைப்புக்கள் சில
பள்ளிவாசல் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலதா
மாளிகையின் கௌரவத்தை கருத்தில் கொண்டு கண்டி
புனித பூமி
வளாகத்தில் அமைக்கப்படும் கட்டடங்கள் அனைத்தும் தலதா
மாளிகையை விட
உயரம் குறைவாகவே
நிர்மாணிக்கப்படவேண்டும் என பாரம்பரிய
சட்டடம் காணப்படும் சந்தர்ப்பத்தில்,
கடும் போக்கு
முஸ்லிம்கள் சிலர் அதற்கு எதிராக இனவாதத்தை
தூண்டும் வகையில்
செயற்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்
தெரிவித்துள்ளனர்.
என்றாலும்
குறித்த பள்ளிவாசலின்
“மினரா” கட்டப்பட்டாலும்
அது தலதா
மாளிகையை விட
உயரமாக அமையாது
என பள்ளிவாசல்
நிர்வாக சபையினர்
தெரிவித்துள்ளனர். அதேவேளை எதிர்ப்புக்கள்
காரணமாக “மினரா”
கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
கண்டி மாநகர சபையின் அனுமதியின்றி பள்ளிவாசலை அபிவிருத்தி செய்யக்கூடாது என ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்களின் உச்ச ஸ்தானத்திலிருக்கும் தலதா மாளிகையை விடவும் கூடிய உயரத்தில் பள்ளிவாசலின் மினாரத்தை அமைக்கக் கூடாது என்பதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகும்..
அமைச்சர் ரவூப் ஹக்கிம் அவர்களின் அனுசரனையுடன் பள்ளிவாசல் நிர்மாண வேலைகள்
முன்னெடுக்கப்படுவதாகவும் கண்டியை அடுத்துள்ள பிலிமத்தலாவையில் உள்ள பித்தளை கைத்தொழில்
முயற்சியாளர்களிடம் இதற்கான ஓடர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தலதாமாளிகையை விட
28 அடி உய்ரமான கோபுரம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
உலகில் எந்தவொரு நாட்டிலும் தமது பிரதான மதம் தவிர்ந்த ஏனைய மதங்களுக்கு இவ்வாறு உயர்ந்த கோபுரங்கள்
அமைப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. எனவே இதனை உடன் நிறுத்த வேண்டும் எனவும்
ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பொலிஸார் தலையிட்டு கண்டி மாநகர சபை ஆணையாளரின் கடிதத்தை
ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காண்பித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக
கலைந்து சென்றதாக அறிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரால் காட்டப்பட்ட ஆணையாளரின் கடிதம் கண்டி மாநகர சபையின் அனுமதியின்றி
எவ்வித அபிவிருத்தியும் செய்யக்கூடாது என ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட கடிதமாகும்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment