முஸ்லிம்
எய்ட் பணியாளர்களால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள்
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட கொலன்னாவ குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் முஸ்லிம் எய்ட் பணியாளர்களால்
வழங்கப்பட்டது.
கொலன்னாவ,
வெல்லம்பிட்டி பிரதேசங்களில் வெள்ளநீர் வடிந்துவிட்ட போதிலும்
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமை இன்னமும் முன்னைய
நிலைமைக்குத் திரும்பவில்லை.
அன்றாடம்
கூலித்தொழில்கள் மூலம் தமது வருமானத்தைப் பெறுகின்ற
குடும்பங்களின் நிலையோ இன்னமும் மோசமானதாகத்தான் உள்ளது.
அவ்வாறு
பாதிக்கப்பட்ட பகுதிகளான மெகட - கொலன்னாவ, அபூபக்கர்
மஸ்ஜித் மஹல்லாவைச்
சேர்ந்த மக்களுக்கு
450 உலர்உணவுப் பொதிகளையும், பலூலியாமஸ் ஜித்மஹல்லாவைச் சேர்ந்த
மக்களுக்கு 300 உலர்உணவுப் பொதிகளையும் முஸ்லிம் எய்ட் வழங்கி வைத்துள்ளது.
முஸ்லிம்
எய்ட் பணியாளர்கள், இக்ராம்இஸாக், அஸ்மி
ஆகியோருடன் மௌலவி நாளீர், சமய சமூகத் தலைவர்கள்
விநியோக நிகழ்வில்
பங்கேற்றனர்.
இனமத
வேறுபாடுகள் இன்றி முஸ்லிம்எய்ட் மேற்கொண்டு வரும் சேவைகளுக்கு மூவின
சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தமது நன்றிகளைத்
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment