குத்துச்சண்டை
ஜாம்பவான்
முஹம்மது அலி இன்று காலமானார்!
'தி கிரேட்டஸ்ட்' என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற
குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி(74) சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.
காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முஹம்மது
அலி(74) தொழில்முறை
குத்துச்சண்டை உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழ்ந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட முஹம்மது அலி,வரிசையாக மூன்று
முறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற
தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.
கடந்த முப்பது ஆண்டுகளாக ‘பார்கின்சன்டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி,1981-ம் ஆண்டுக்கு
பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி
மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி,
அமெரிக்காவின் அரிசோனா
மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வந்தார்.
சுவாசம் சார்ந்த பிரச்சனைகளால் வெகுவாக
பாதிக்கப்பட்டுள்ளதால் முஹம்மது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக
மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக முஹம்மது அலியின் செய்தி தொடர்பாளர் நேற்று
தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
0 comments:
Post a Comment