அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு
ஹிலாரி முன்னிலையில் :
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு
டிரம்பை விட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 11 சதவீதம் கூடுதல் ஆதரவு பெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பை ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனமும், இப்சொஸ் மார்க்கெட்டிங் நிறுவனமும் இணைந்து மே 30-ந் திகதிக்கும், ஜூன்
3-ந் திகதிக்கும் இடையே நடத்தின. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
ஹிலாரியை 46 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். அதே வேளையில் டிரம்பை 35 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர். 19 சதவீதம் பேர் இருவருக்கும் தங்களது ஆதரவு இல்லை என அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8-ந் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் கோடீஸ்வர தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வேட்பாளர் ஆவதற்கான பிரதிநிதிகள் வாக்குகளை அவர் பெற்று விட்டதால், அதிகாரப்பூர்வ வேட்பாளராக அடுத்த மாதம் அறிவிக்கப்படுகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் ஆவதற்கு தேவையான பிரதிநிதிகள் வாக்குகளை முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்னும் பெறவில்லை. எனினும் பெரிய மாநிலங்களான கலிபோர்னியா, நியூஜெர்சி போன்றவற்றில் வேட்பாளர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அவர் அந்த தேர்தலில் தேவையான பிரதிநிதி வாக்குகளை பெற்று, போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
0 comments:
Post a Comment