கண்ணீருடன் பிரியாவிடை பெற்றார்
ஜேர்மனி கால்பந்து அணித்தலைவர்..!
ஜேர்மனி கால்பந்து அணித்தலைவர் பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர்(Bastian Schweinsteiger) சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஜேர்மனியில் உள்ள மோன்செங்கிளாட்பேச் நகரில் நடந்த பின்லாந்துக்கு எதிரான நட்புறவு கால்பந்து போட்டியில் உலக சாம்பியன் ஜேர்மனி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவே ஸ்வெய்ன்ஸ்டீகரின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. இந்த ஆட்டத்துடன் 32 வயதான ஜெர்மனி கேப்டன் பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
2004ம் ஆண்டு ஜேர்மனிக்காக களமிறங்கி விளையாடி ஸ்வெய்ன்ஸ்டீகர் இதுவரை நாட்டிற்காக 121 போட்டிகளில் விளையாடி 24 கோல் அடித்துள்ளார். இவர் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் மிட்பீல்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற ஜேர்மனி அணியில் ஸ்வெய்ன்ஸ்டீகரும் இடம் பெற்று இருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
போட்டிக்கு பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்ட போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
பின்னர் ஸ்வெய்ன்ஸ்டீகர் பேசுகையில், எனக்கு கால்பந்து விளையாட்டு என்றுமே பிடிக்கும். நாட்டிற்காக விளையாடியதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்.
என்னை இந்த அளவிற்கு ஊக்குவித்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
0 comments:
Post a Comment