சாய்ந்தமருது தோணாவும் மூன்று கோடியும்!

பொறுப்பாக இருந்தவருடன் ஒரு சில நிமிட உரையாடல்

இன்று 2016. 09. 03 ஆம் திகதி அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் அஷ்ஷெய்க் SHM. Hanifa Mathani அவர்களோடு நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னர் ஒருசில நிமிடங்கள் உரையாடக் கிடைத்தது.
இவர் தான் அண்மையில் சாய்ந்தமருதின் தோணா மூன்று கோடி ரூபாய் செலவில் ஏதோ செய்யப்பட்ட திட்டத்திற்கு பொறுப்பாக இருந்தவர்.
நான்: தோணாவில் 3 கோடி செலவு செய்யப்பட்டதா?
அவர்: ஆம்.
நான்: அப்படி என்ன நடந்தது?
அவர்: Cleaning வேலை
நான்: அதற்கு 3 கோடியா?
அவர்: கொஞ்சம் யோசித்தவராக...அது...3 கோடி என்றாலும், அந்த வரி இந்த வரி நானாவிம் என்று சுமார் 40 - 60 இலட்சங்கள் போயிருக்கும்.
நான்: சரி. நீங்கள் சொல்வது போல ஒரு கோடி போகட்டும். மிகுதி 2 கோடி ரூபாய்க்கு நடந்த வேலை cleaningமட்டும் தானா?
அவர்: அது... அதிகாரிகள் தங்குவதற்கு, பிரயாணிப்பதற்கு, கனரக வாகனங்கள் வந்து போவதற்கு, இன்னோரன்ன செலவுகளோடு cleaning...
நான்: பொறுமை இழந்தவனாகவும், ஆதங்கப்பட்டவனாகவும்...இதற்கு முன்னரும் Jameel இருந்த போது, வெறும் 20 இலட்சம் (அது கூட அதிகமாம்) ரூபாய் செலவில் cleaning நடந்ததே.
அவர்: அவர் முகத்தில்...அது கவலையா...ஒருவித மாற்றம்... வேறு ஒன்றும் நடக்கவில்லையா?
நான்: பொறுமையை இழந்து.... இது தான் உண்மையாக விசாரிக்கப்பட வேண்டும். 3 கோடி ரூபாய்க்கு நடந்த வேலைத்திட்டம் என்ன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். எமது ஊர் மக்கள் பொறுமையாக இருக்கிறார்கள். அந்த விடயத்தில் எமது ஊர் ஏமாற்றப்பட்டு விட்டது. இன்னும் ஏமாற்றப்படுகின்றது. அள்ளாஹ் மிகப் பெரியவன். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஏமாற்றுவார்கள். இதற்கு முன்னரும் எத்தனையோ பேர் அநியாயம் செய்து அழிந்து விட்டார்கள். இன்னும்.....
அவர்: எதுவும் பேசாமல் கேட்ட வண்ணம் இருந்தார். முகம் மாறியிருந்தது...அவர் மேடைக்கு அழைக்கப்படுகிறார். போகிறார்...
-          Nagoor Ariff

ஆதாரம்: ஊடக நண்பரொருவர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top