கல்முனை மாநகர சபை ஊழியர்கள்
கவனயீர்ப்பு போராட்டம்...
கல்முனை
மாநகர ஆணையாளரை
அவமதிப்பு செய்த
வர்த்தகரை உடனடியாக
கைதுசெய்யுமாறு கோரி இன்று 5 ஆம் திகதி கல்முனை மாநகர சபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சாய்ந்தமருதுக்கு சென்ற கல்முனை மாநகர ஆணையாளர், மோட்டார் விற்பனை செய்யும் ஒரு கடைக்கு முன்பாக வீதியோர
நடைபாதையில், விற்பனைக்கான மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை
சுட்டிக்காட்டி, அதனை உள்ளே நகர்த்துமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அதைத் தொடர்ந்து
அந்த கடையின் உரிமையாளர், ஆணையாளரை மோசமான வார்த்தைகளினால் தூற்றி, அச்சுறுத்தியதுடன்
அவரை தாக்கவும் முற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment