சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்கவே
கட்சியை பொறுப்பேற்றேன்
- ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன
ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான
S.W.R.D.பண்டாரநாயக்க, எப்படியான நெருக்கடிகள்
ஏற்பட்டாலும் முதுகெலும்புள்ள அரசியல் தலைவராக செயற்பட்டவர்
என ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருணாகல்
மாளிகா மைத்தானத்தில்
நடைபெற்ற ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா
மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை
கூறியுள்ளார்.
பண்டாரநாயக்க
ஐக்கிய தேசியக்
கட்சியை உடைத்து
கொண்டு வந்து
ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியை ஆரம்பித்தார்
என சிலர்
கூறுகின்றனர்.
இதற்கு
நான் இணங்க
மாட்டேன். சிங்கள
மகா சபையை
சேர்ந்த சிலருடன்
இணைந்தே அவர்
கட்சியை ஆரம்பித்தார்.
பண்டாரநாயக்க
நாட்டை குறுகிய
காலம் ஆட்சி
செய்த தலைவர்,
ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி ஜனநாயகத்தை
அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சி என்பதால்,
கட்சியை வலுப்படுத்த
வேண்டியது அவசியம்.
தற்காலத்திற்கு தேவையான வகையில் கட்சியில் மாற்றங்களை
செய்ய வேண்டும்.
எனக்கு
விடுத்த அழைப்பு
காரணமாகவே கட்சியை
பொறுப்பேற்றுக்கொண்டேன். பொது வேட்பாளராக
போட்டியிட்ட நான், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் என்ற வகையிலேயே கையெழுத்திட்டேன்.
ஜனாதிபதி
என்ற வகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் அரசாங்கத்தை
ஏற்படுத்தவே கட்சியின் தலைவர் பதவியை ஏற்றேன்.
தற்போது அனைத்து
கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்கிறோம். விமர்சனங்கள்
இருக்கின்றன.
பான்
- கீ மூன்
2009ஆம் ஆண்டு
போர் முடிவுக்கு
வந்த பின்னர்
இலங்கைக்கு முதல் முறையாக விஜயம் மேற்கொண்டார்.
அவர் வந்து
சென்ற பின்னர்
என்ன நடந்தது?.
நாம்
நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் போரிட்ட இராணுவத்தினருக்காக
குரல் கொடுக்க
வேண்டும். நாட்டு
மக்கள் பீதி
சந்தேகம் இல்லாத
மகிழ்ச்சியாக வாழும் நாட்டை உருவாக்கும் தேவை
ஏற்பட்டது.
ஜனாதிபதித்
தேர்தலுக்கு செல்ல வேண்டாம் என நான்
மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை
அனுப்பினேன்.
கட்சியையும்
அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம்
இருக்குமாயின் அப்படியான கடித்தை அனுப்பியிருப்பேனா?. எம்மால் வெற்றிபெற முடியாது என
பலரும் கூறினர்.
எனினும் கேட்கவில்லை. தோல்வியை வெற்றியாக்க அதனை
ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் செயலாளர்
கையில் எடுத்துக்கொண்டது
தவறா என
நான் கேட்கின்றேன்.
எதிர்காலத்தில்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்
அரசாங்கத்தை அமைக்கும் முதல் வேட்டே இன்று
தீர்க்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி
சபைத் தேர்தலில்
நாங்கள் கைச்சின்னத்தில்
போட்டியிடுவோம். எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அனைவருக்கும்
அழைப்பு விடுக்கின்றேன்.
நாடாளுமன்றத்தில்
எதிர்க்கட்சியில் அமர அனுமதி கோரி அணியினர்
தனியான கட்சியை
ஆரம்பிக்காது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்
அரசாங்கம் ஒன்றை
அமைக்க இணையுமாறு
கோருகிறேன்.
ஒரு
கட்சியின் தலைவர்
செய்ய வேண்டியது
மற்றும் செய்யக்
கூடாதது குறித்து
நாம் புரிந்திருக்க
வேண்டும். தோல்விக்கான
காரணங்களை செய்யக்
கூடாது. வெற்றிக்கான
காரணங்களை மேற்கொள்ள
வேண்டும்.
நாட்டில்
சிலர் என்னை
வெளிப்படையாக தாக்குகின்றனர். மறைமுகமாக தாக்குகின்றனர். சிலர்
மறைந்திருந்து தாக்குகின்றனர்.
வறியவர்களில்
இருந்து வந்த
தலைவர் என்ற
காரணத்திற்காகவா என்னை தாக்குகிறீர்களா என நான்
கேட்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment