கல்முனை மக்களின் நகர மண்டபம்
மக்கள் நலனைப்
புறக்கணித்து
வாடைகைக்கு விடப்பட்டுள்ள அவலம்!
மக்கள் விசனம்
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் காலத்தில்இப்பிரதேச மக்களின் கலை, கலாச்சார
மற்றும் பொது வைபவங்களை சிறப்பாக நடத்தும் பொருட்டு நல்லதொரு நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களால் 18.03.1996 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டதுதான்
கல்முனை மக்களின் நகர மண்டபம். ஆனால் இன்று அம்மண்டபத்தில் என்ன நடக்கின்றது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கல்முனை மாநகர சபை கல்முனை மக்களின் நகர மண்டபத்தை ஒரு சொற்ப
வருமானத்திற்காக மக்களின் நலனைக் கவனிக்காதும் இப்பிரதேச மூத்த அரசியல்வாதிகளின் நல்ல
திட்டத்திற்கு மண் போடும் வகையிலும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வாடகைக்கு விட்டு வருமானத்தை தேடுவது எவ்வகையில்
நியாயம் என மக்கள் வினவுகின்றனர்.
கல்முனை மக்களின் இந்த நகர மண்டபத்தில் அப்பிரதேசத்தின் எதிர்கால
தலைவர்களான சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் பல நடந்திருக்க வேண்டும்.
இப்பிரதேச மாணவர்களின் அறிவுகளை பெருக்குவதற்கான பல கருத்தரங்குகள்
இம்மண்டபத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இப்பிரதேச மக்களுக்குத் தேவையான அறிவுசார் கண்காட்சிகள் பல இங்கு
நடந்திருக்க வேண்டும்.
இப்பிரதேச கவிஞர்களின் கவிதைகள் இம்மண்டபத்தில் வெற்றிகரமாக
அரங்கேரியிருக்க வேண்டும்.
இப்பிரதேச கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், பிரதேச முன்னேற்றத்திற்காக
உழைத்தவர்கள் என இப்பிரதேசத்தை சிறப்பிக்கும் முக்கியஸ்த்தர்களை அவ்வப்போது கெளரவித்து
இவர்களைப் பெருமைப் படுத்துவதுடன் இதன் மூலம் இப்பிரதேச இளம் சமுதாயத்திற்கு உற்சாகமூட்டுவதற்கும்
இம்மண்டபம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இம்மண்டபம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்திராதவர்களின்
செயல்பாட்டால் கல்முனை மக்களின் நகர மண்டபம் வேறு நோக்கத்திற்காக விடப்பட்டு வாடகையாக
பணம் சம்பாதிப்பது எதனைக்காட்டுகின்றது?
அன்றிருந்த அரசியல்வாதிகள் இப்பிரதேசத்திற்கு கட்டடங்களைக் கொண்டுவந்தார்கள்.
இன்றைய எமது அரசியல்வாதிகள் கட்டடங்களைக் கொண்டுவராவிட்டாலும் அதனை சிறப்பாக பராபரித்து
மக்களின் தேவைக்கு பயண்படுத்த முடியாது வாடகைக்கு விடக்கூடிய நிலையில் உள்ளனரா என்றும்
இப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment