சீனிக்கான வரி அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய 1 கிலோ கிராம் சீனிக்கான வரி ரூபா. 1.75 வினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த ரூபா. 25 சதம் வரி, இதற்கமைய இரண்டு ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 1 கிலோ கிராம் சிவப்பு சீனிக்கான வரி 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சிவப்பு சீனி சந்தைக்கு வந்துள்ளதால், உள்நாட்டு சீனி உற்பத்தியை பாதுகாக்கும் நோக்கில், சிவப்பு சீனிக்கான வரியை 15 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டபோதும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள ரூபா 95/- என்ற அதிகூடிய சில்லறை விலையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment