கொழும்பு விகாரமாதேவி பூங்காவில்
கைவிடப்பட்ட நிலையில் முதியவர்!



காலியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு தனது உறவுகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் போவோர், வருவோரை பார்த்த வண்ணம் இருந்துள்ளார்.

இதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் அந்த முதியவரை தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவரின் மகள் வீடமைப்பு அதிகாரசபையில் பணிபுரிவதாக முதியவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதுடன், தன்னுடைய பிள்ளைகள் கொழும்பில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


தான் தங்கியிருந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை விகாரமாதேவி பூங்காவில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாகவும் முதியவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top