ஏறாவூர் இரட்டைக்கொலை விவகாரம்;
மோட்டார் சைக்கிள், இரத்தக்கறை படிந்த உடைகள்
மீட்பு
ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கொலையாளி பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் இரத்தக்கறை படிந்த உடைகளும் நேற்று 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை,
முள்ளிப்பொத்தானையின் 10ஆம் கொலனியிலுள்ள
வீடு ஒன்றிலிருந்து
இவை மீட்கப்பட்டன.
சம்பவ தினத்தன்று
குறித்த மோட்டார்
சைக்கிளில் பயணம் செய்தமை அங்குள்ள வியாபார
நிலையம் ஒன்றிலிருந்த
சீசீரீவீ கமெராவில்
பதிவாகியிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு
மோட்டார் சைக்கிளை
தேடும் நடவடிக்கையில்
பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
மேலும்,
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் கைதுசெய்யப்பட்ட 4 சந்தேக நபர்கள் வழங்கிய தகவலின்;
அடிப்படையில் உறவினரின் வீடு ஒன்றில்; மறைத்து
வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்; உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.
ஏறாவூருக்குக்
கொண்டு வரப்பட்ட
தடயப் பொருட்கள்
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பொலிஸார்
கூறினர். கொலைச்
சம்பவம் இடம்பெற்ற
வீட்டில் கொலையாளிகளால்
திருடப்பட்ட நகைகள் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்,
கந்தளாய், முள்ளிப்பொத்தானை
போன்ற இடங்களில்
மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக
தெரியவந்ததை அடுத்து அது சம்பந்தமான மேலதிக
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சனிக்கிழமை இரவு
கொலைச் சந்தேக
நபர்களில் சிலர்
குறித்த பகுதிகளுக்கு
அழைத்துச் செல்லப்பட்டு
விசாரிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.