மலையக மக்களுக்கு 07 பேர்ச்சஸ் நில உரிமை மற்றும்
பொருத்தமான வீடொன்றினை பெற்றுக் கொடுக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
மலையக
வாழ் மக்களின்
பிரதான பிரச்சினையாக
திகழும் சொந்த
வீடு இன்மை எனும் பிரச்சினைக்கு நிரந்தர
தீர்வாக மலையகத்தின்
சட்ட ரீதியாக
வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு
07 பேர்ச்சஸ் அளவிலான வங்கியில் வைத்து பணம்
பெறத்தக்க காணி
உரித்துகளை வழங்குவதற்கும், அதற்காக மண்சரிவு அற்ற
பிரதேசங்களை இனங்கண்டு, அவ்விடங்களை பிராந்திய பெருந்தோட்டக்
கம்பனிகள் மற்றும்
அரச நிர்வனங்களில்
இருந்து விடுவித்துக்
கொள்வதற்கும் அமைச்சரவை அங்கிகாரம்
வழங்கியுள்ளது.
மலைநாட்டு
புதிய கிராமங்கள்,
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி
அமைச்சர் பழனி
திகாம்பரம் அவர்கள், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்
நவீன் திசாநாயக்க
அவர்கள், காணி
அமைச்சர் ஜோன்
அமரதுங்க அவர்கள்
ஆகியோல் இணைந்து
முன்வைத்த அமைச்சரவை
பத்திரத்திற்கு அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment