கொழும்பு மெனிங் சந்தைத் தொகுதியினை

பெலியகொடை பிரதேசத்தில் மீள் நிர்மாணம் செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்

கொழும்பு நகர மீள் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள மெனிங் சந்தைத் தொகுதியினை பெலியகொடை பிரதேசத்தில் மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தினை துரித கதியில் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினை உணர்ந்து பெலியகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள, அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்துக்கு உரித்தான சுமார் 06 ஏக்கர் காணியினை 03 வருட காலத்துக்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையின்  அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top