தமிழக முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை
சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சை
24 மணி நேரத்திற்கு பின்னர்தான் உடல்நிலை குறித்து
முழுமையான தகவல் வெளியே வரும்
தமிழக
முதல்வர் ஜெயலலிதாவிற்கு
நேற்று மாலை
திடீரென மாரடைப்பு
ஏற்பட்டது. இதை சரிசெய்தற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை
அளிக்கப்பட்டது.
தமிழக
முதல்வர் ஜெயலலிதா
அப்பல்லோ மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று
வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் திகதி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட அவர், எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ்
செய்யப்படலாம் என்ற வேளையில் நேற்று மாலை
அவருக்கு திடீரென
மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால்
அவருக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் ரத்த
ஓட்டத்தை சரிசெய்வற்காக
ஆஞ்ஜியோ சிகிச்சை
அளிக்கப்பட்டது. இது ஆஞ்ஜியோ கிராபை போன்றது.
அறுவை சிகிச்சைக்குப்
பின் அவரது
உடல்நிலை சீராக
உள்ளதாக கூறப்படுகிறது.
அறுவை
சிகிச்சை செய்யப்பட்டதால்
தொடர்ந்து 24 மணி நேரம் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். 24 மணி நேரத்திற்கு
பின் ஜெயலலிதாவின்
உடல்நிலை குறித்து
முழுமையான தகவல்
வெளியே வரும்.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் வெளியானதும், அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக தொண்டர்களும், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களும் கூடினர்.
இரவிரவாக அவர்கள் அங்கேயே தங்கி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இன்னமும், அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
அதேவேளை, தமிழ் நாடு ஆளுனர் வித்தியாசாகர்ராவ் நேற்றிரவு மும்பையில் இருந்து அவசரமாக சென்னை வந்து, அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து ஆராய்ந்தார்.
இதையடுத்து, இன்று காலை 7 மணிக்கு அனைத்து காவல்துறையினரையும் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார்.
தமிழ்நாடு முதல்வரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு எங்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை, சமூக வலைத்தளங்களில் பெருமளவு வதந்திகள் பரவி வருகின்றன. இன்று தமிழ்நாட்டில் பாடசாலைகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக வதந்திகள் வெளியான போதும், அதனை ததமிழ் நாடு அரசு மறுத்துள்ளது.
0 comments:
Post a Comment