ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு! பரபரப்பாகும் அப்போலோ

மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனையின் வாயிலில் அதிமுகவினர் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஏறத்தாழ அனைத்து தமிழக அரசு உயர் அதிகாரிகள், காவல் துறையினர் அப்போலோவிற்கு வந்து இருக்கிறார்கள். அப்போலோவில் பரபரப்பான சூழலில் நிலவுகிறது
அப்போலோ மருத்துவமனை வளாகம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஜெயலிலதாவுக்கு மாலை இதய துடிப்பு முடக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக இதய மற்றும் நுரையீரல் துறை நிபுணர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அப்போலா தெரிவித்துள்ளது.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை விரைகிறார்

மும்பையில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை விரைகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை அறிவதற்காக வித்யாசாகர் ராவ் இன்று இரவு சென்னை செல்கிறார். அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர்.

மருத்துவமனை முன் பாதுகாப்பு அதிகரிப்பு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பலோ முன் அதிமுகவினர் குவிந்தனர். இதனை அடுத்து அப்பல்லோ மருத்துவமனை முன் வழக்கத்தைவிட பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top