காட்டுக்குள் திசைமாறியவர்கள்
ஹெலிகொப்டரின் உதவியுடன் பத்திரமாக மீட்பு
மஸ்கெலியா எமில்ட்ன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற நிலையில், திங்கட்கிழமை இரவு, காணாமால் போன ஐவரும், இரண்டு நாட்களின் பின்னர், இன்று பகல் 2 மணியளவில் அதிரடிப்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நேற்று இரவு 10 மணியளவில் சென்ற அதிரடிப்படையினர் எமில்டன் பாதுகாப்பு வனப்பகுதியான ரதபொட் எனும் இடத்தில் இவர்களை கண்டுபிடிக்கப்பட்டு இன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஐவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதில், வழிகாட்டி - கிருஷ்ணசாமி (வயது 56), தோட்ட முகாமையாளர்களின் உறவினர்களான காவிந்த திசேரா (வயது - 22), மிகார விக்கிரமசிங்க, (வயது - 31) பியூமி கல்பனிவன்ச (வயது – 23) சமித்தா விக்கிரமசிங்க (வயது – 55) ஆகியோரே இவ்வாறு காணாமல் போய் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் அடங்கிய இரண்டு பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
0 comments:
Post a Comment