சவூதி அரேபியாவில் ‘பர்தா’ அணியாத
படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இளம்பெண் கைது
சவூதி அரேபியாவில் பர்தா அணியாத போட்டோவை இணையதளத்தில் வெளியிட்ட இளம் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் சவூதிஅரேபியாவை சேர்ந்த ஒரு பெண் ரியாத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அவர் ‘பர்தா’ அணியவில்லை. சாப்பிடும் முன்பு அந்த போட்டோவை டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டார். அத்துடன் அவருக்கு சம்பந்தமில்லாத ஒரு ஆண் நபருடன் பேசிக் கொண்டிருக்கும் படத்தையும் வெளியிட்டார்.
அது பல வண்ணங்களுடன் கூடிய ஆடையாகும். மேலும் கருப்பு நிற ஜாக்கெட்டும், மிக உயரமான பூட்ஸ்களும் அணிந்து இருந்தார். அவரது போட்டோவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. மேலை நாட்டினர் பலர் அவரை பாராட்டி வாழ்த்தும் தெரிவித்து இருந்தனர். அதே நேரத்தில் சவூதி அரேபியாவில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நாட்டின் பொதுவான நடத்தை விதிமுறையை மீறிய அவரை சிறையில் தள்ள வேண்டும் என்றும், மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. பலர் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தனர்.
ஆனால் அப்பெண் கைது செய்யப்பட்டதாக ரியாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனெனில் சவூதிஅரேபியாவில் வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் பர்தா மற்றும் தலையில் முக்காடு அணியாமல் செல்லக் கூடாது. அவ்வாறு செல்வது பெரும் குற்றமாகும்.
அப்பெண்ணின் பெயரை வெளியிடவில்லை. ஆனால் அவருக்கு 20 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டுவிட்டரில் மலாக்அல்-ஷெரி என்ற பெயரில் போட்டோ பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment