ஏறாவூர் இரட்டைக்கொலை:
சந்தேகநபர்களின் விளக்கமறியல்
28ஆம் திகதி வரை  நீடிப்பு

ஏறாவூர்ப் பிரதேசத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற  இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் 06 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் இன்று 14 ஆம் திகதி இச்சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோது, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்..எம்.றிஸ்வி உத்தரவிட்டார்.

ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்;டமை குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top