சாய்ந்தமருது தோணா அபீவிருத்தி?
அநீதியை மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
மக்களின் வரிப்பணம் இப்படி திட்டமிட்டு சுரண்டப்படும் அநியாயத்துக்கு பதிலளிக்க தகுதிவாய்ந்த அதிகாரி யார்?
கடந்த 2015 பாராளுமன்ற தேர்தல் காலத்தில் 50 மில்லியன் என்ற தொகைக்கு எமது தோணா சல்பீனியா அள்ளப்பட்டு சுத்திகரிக்கும் மிகப்பெரிய நிதி மோசடி யாருக்கும் கணக்கு காட்டாத கபளீகரம் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே.
இதன்போது கடற்கரை வீதியோடு இணைந்திருக்கும் தோணாவின் அருகில் உள்ள வீதி கிறவல் மண் போட்டு 150 அல்லது 200 மீட்டர் இந்த மில்லியன் கணக்கு செலவில் செப்பனிடப்பட்டது.
அவ்வாறு பல மில்லியன் செலவில் போடப்பட்ட வீதி மீண்டும் அகற்றப்பட்டு அவலத்துக்குள்ளான தோணா மீண்டும் அபீவிருத்தி என்ற போர்வைக்குள் சுத்தப்படுகிறது.
மீண்டும் தற்போது இந்த தோணா 1மீற்றர் நீளம் ஒன்றுக்கு 125,000.00 ரூபா செலவில் கேபியன் வோல் (Gabion Wall) போடுதல் வேலைத்திட்டம் 29,997,750.00 ரூபாவுக்கு திட்டமிடப்பட்ட இந்த திட்டத்தின் மேற்பார்வையாளர் யார்?
இந்த எஸ்டிமேசன் மிகவும் கொழுத்த விலைக்கு பல நபர்களினதும் கொமிசன் விலைகளை உள்ளடக்கி தயார்செய்யப்பட்டுள்தாக சம்பந்தப்பட்ட துறைசார் பொறியியலாளர் ஊடாக அறிய முடிகிறது.
இதன் உண்மைதன்மை குறித்து விரிவாக மக்களுக்கு தெரியப்படுத்துதல் அவசியமானதாகும்.
இந்த திட்டம் சம்பந்தப்பட்ட மக்கள் பங்களிப்பின்றி அவர்களுக்கு எந்தவிதமான அறிவூட்டலும் இன்றி இடம்பெறுவதன் அவசரம் ஏன்?
மில்லியன்கள் செலவில் போடப்பட்ட வீதியை கிண்டி எடுத்துவிட்டு அதே இடத்தில் இந்த சுவர் அமைப்பதற்கான அவசியம் என்ன? இதுதானா சாய்ந்தமருது மக்கள் கேட்டுக்கொண்ட தோணா அபிவிருத்தி.? அப்படியானால் ஏற்கனவே போடப்பட்ட அந்த கிறவல் வீதியின் நிலை என்ன?
அந்த வீதியை எங்கே போய் தேடுவது?
உண்மையான இதன் திட்டம்தான் என்ன?
எப்படி இதனை வடிவமைக்க உள்ளீர்கள்?
இதன் முழுமையான வரைபடம் (DRAFT DRAWING) யாரிடம் உள்ளது?
எமது மக்களின் கலந்தாலோசனைகள் கருத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளதா?
இந்த வேலையை அங்கீகரிக்கும் அதிகாரி யார்?
பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஹக்கீம் அவர்களே!
மக்கள் விரும்புகிற அபிவிருத்தியை உறுதிப்படுத்துங்கள்
பொது மக்களின் நிதி சரியான விதத்தில் பயன்படுத்த உத்தரவாதம் செய்யுங்கள்.
இதன் உண்மையான திட்டத்தை மக்கள் முன் பகிரங்கப்படுத்துங்கள்.
-கலீல் எஸ். முஹம்மத்-
0 comments:
Post a Comment