புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்

ஜெயலலிதாவுக்கு முதன் முறையாக சிலை !



மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன் முறையாக சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5-ம் திகதி மறைந்த ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கக்கோரி புதுச்சேரி அதிமுக சார்பில், முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் முதல் முறையாக திருக்கனூரில் இன்று 16 ஆம் திகதி ஜெயலலிதாவின் முழு திருஉருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது.

திருக்கனூர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் டி.என்.நாசர், ஜெயலலிதாவின் சிலையை வைத்துள்ளார். அதிமுக முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்படாமலேயே இந்த சிலை திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top