ஹசனலிக்கு இடமளிக்க  எம்.எச்.எம்.சல்மான்
எம்.பி பதவியை இராஜிநாமா செய்கிறார்?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மு.காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டே, சல்மான் ராஜிநாமாச் செய்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கம்செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, ஹசனலிக்கு உடனடியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், ஒரு மாத காலத்துக்குள் கட்சியின் பேராளர் மாநாட்டினைக் கூட்டி, அதன் மூலம்முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியினையும் வழங்குவதாக ஹக்கீம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சல்மானின் ராஜிநாமாக் கடிதத்தினுடைய பிரதியொன்றினை செயலாளர் நாயகம் ஹசனலியிடம், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை காலை கையளித்ததாக தெரியவருகிறது

மு.காங்கிரசின் செயலாளர் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வுகாணும் பொருட்டு, ஹசனலியுடன் இவ்வாறானதொரு சமரசத்துக்கு மு.கா. தலைவர் வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை காலை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை, மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் .காதர் ஆகியோர் சந்தித்திருந்தனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top