"மாலபே SAITM திருட்டுக் கல்விக் கடையைக் காக்கும்
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்"

யாழ்ப்பாணத்தில்  அரசாங்கத்திற்கு எதிரான சுவரொட்டிகள்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அரசாங்கத்திற்கு எதிராக 'அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்' எனக் குறிப்பிடப்பட்டுத் தமிழிலும், சிங்களத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

"இலவசக் கல்வியையும், சுகாதாரத்தையும் ஒழிக்கும் அரசின் முயற்சியைத் தோற்கடிப்போம்",
"மாலபே SAITM திருட்டுக் கல்விக் கடையைக் காக்கும் ரணில்- மைத்திரி அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்"
போன்ற தொனிப் பொருள்களிலான சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.


குறித்த சுவரொட்டிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகள், யாழ்.நகர் மற்றும் யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top