130 பெண்களை மணந்த நைஜீரிய மத போதகர் மரணம்

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்தவர் என்று பிரபலமடைந்த நைஜீரியாவைச் சேர்ந்த மதபோதகர் மொகம்மது பெல்லோ அபுபக்கர் தனது 93வது வயதில் உயிரிழந்தார்.
நைஜெர் மாகாணத்தில் பிடா என்ற பகுதியில் வசித்து வந்த அபுபக்கர் உடல் நலக் குறைவு காரணமாக காலமானதாகவும், அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
ஏராளமான பெண்களை மணந்ததால் மிகுந்த சர்ச்சைக்குள்ளான நபராக அபுபக்கர் பிரபலமானார்.
மரணிக்கும் முன்னர், தனது உதவியாளரிடம் பேசிய அபுபக்கர், தனது இறுதி நாள் நெருங்கிவிட்டது. கடவுள் எனக்குக் கொடுத்த வேலைகளை முடித்துவிட்டேன். அவரை சந்திக்க தயாராகிவிட்டேன் என்று கூறியதாகத் தெரிவித்தார்.
2008ம் ஆண்டு, 86 மனைவிகளோடு வசித்து வந்த அபுபக்கர், உடனடியாக 48 மணி நேரத்துக்குள் தனது 82 மனைவிகளையும் விவகாரத்து செய்யுமாறு முஸ்லிம் மத போதகர்களால் வலியுறுத்தப்பட்டார். அப்போது அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளவே என்னை கடவுள் அனுப்பினார் என்று அவர் வாதிட்டார்.

அபுபக்கர் அவர்களது நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்து விட்டதோடு தனது திருமணங்கள் அனைத்துமே தனது வாழ்நாளில் தன்னால் செய்ய முடிந்த  ‘தெய்வீகப் பணிகள்என்று கூறி பிறரது விமர்சனங்களைப் புறம் தள்ளினார். தற்போது தனது 93 வயதில் அபுபக்கர் இயற்கை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு 130 மனைவிகள் மூலமாக 203 குழந்தைகள் இருப்பதாகவும், மனைவிகளில் சிலர் கர்ப்பிணிகளாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top