வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள
வீதிகளை புனரமைத்தல், மேம்படுத்தல் திட்டத்திற்கு
அமைச்சரவையின் அங்கீகாரம்
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள வீதிகளில் ஏறத்தாழ 4,000 கி.மீ. நீளமான வீதிகளை புனரமைத்தல், மேம்படுத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிற்காக நிதியுதவியளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் கட்டம் - 02 இனை செயற்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment