நிந்தவூரில் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று திறந்து வைத்தார்
இலங்கையின் முதலாவது தொற்றா நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை திறப்பு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று 28 ஆம் திகதி சனிக்கிழமை) மாலை திறந்துவைத்தார்.
சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சினால் 192 மில்லியன் ரூபா செலவில் இந்த வைத்தியசாலை புதிய கட்டிடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இத்திறப்பு விழாவில் பிரதியமைச்சர் பைஸல் காசிம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், அப்துல் றஸாக் (ஜவாத்), கட்சியின் மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீட், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான பளீல் பி.ஏ., ஏ.சி. யஹியாகான், ஹனீபா மதனி, முன்னாள் தவிசாளர் அன்சில் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment