தேசிய பல் (போதனா) வைத்தியசாலையை இன்று திறப்பு
ஜனாதிபதி தலைமையில்
நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய
பல் (போதனா) வைத்தியசாலையின்
முதற்கட்டப்பணியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட
புதிய கட்டத்தொகுதியும்
இரண்டாம் கட்டப்பணியின்
கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள
புதிய கட்டிடத்திற்கான
அடிக்கல் நாட்டும்
நிகழ்வும் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவின்
தலைமையில் இன்று
பிற்பகல் இடம்பெற்றது.
1200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட
இந்த வைத்தியசாலையை
திறந்து வைத்தப்பின்னர்
ஜனாதிபதி முதலாவது நோயாளியை
கணனியின் ஊடாக
பதிவு செய்தார்.
மருத்துவமனையில் கண்காணிப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், மதகுருமார்களின் ஆசீர்வாதத்துடன் மருத்துவமனையின் இரண்டாம் கட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள ஒன்பது மாடி கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.
பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி ஜயசுந்தர பண்டார அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
வெள்ளவத்தை விஜயாராமாதிபதி வணக்கத்துக்குரிய அஹங்கம ஆனந்த தேரர், தேசிய மருத்துவமனை ஆளணி பணிப்பாளர் பண்டித ரஜவெல்லே சுபூதி தேரர் உள்ளிட்ட மதகுருமார்களும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைஷால் காஷிம், அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம, தேசிய பல் மருத்துவமனை பணிப்பாளர் புஸ்பா கம்லத்ஹே ஆகியோர் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment