முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
ஆறு முதலமைச்சர்கள் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதிக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஆறு முதலமைச்சர்கள் கலந்துகொண்டதாக  தெரிிவக்கப்படுகிறது.வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன இந்த கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருக்கவில்லையென கூறப்படுகின்றது. அவசியமான தேவையொன்றின் நிமித்தம் தான் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லையென அவர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகி ன்றது.
இதேவேளை  தான் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு முன்னணியிலுள்ள எந்தவொரு நபருடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முதலமைச்சர்களுடனான சந்திப்பை அடுத்து ஊடக வியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஸ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை என, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையாயினும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே,பாரா ளுமன்ற தேர்தலில் கிடைக்கப் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் வலுவுடன் முன்னோக்கி செல்லவுள்ளதாகவும் சுட்டிக்காட்டி யுள்ளார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top